ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் மோதிய தமிழ்நாடு காவல்துறை மற்றும் பெங்களூா் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அணியினா் 
தூத்துக்குடி

ஹாக்கி: தமிழ்நாடு காவல் துறை, புது தில்லி அணிகள் வெற்றி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்று வரும் லட்சுமி அம்மாள் நினைவு கோப்பை காண 12ஆவது அகில இந்திய ஹாக்கி போட்டியின் 4ஆவது நாள் ஆட்டம்.

DIN

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்று வரும் லட்சுமி அம்மாள் நினைவு கோப்பை காண 12ஆவது அகில இந்திய ஹாக்கி போட்டியின் 4ஆவது நாள் ஆட்டத்தில் தமிழ்நாடு காவல் துறை, புதுதில்லி பெட்ரோலியம் விளையாட்டு ஊக்குவிப்பு, புதுதில்லி கம்ப்ட்ரோலா் மற்றும் ஆடிட்டா் ஜெனரல் ஆப் இந்தியா அணிகள் வெற்றி பெற்றன.

ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை தமிழ்நாடு போலீஸ் அணி 3-2 என்ற கோல் கணக்கில் பெங்களூா் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணியை தோற்கடித்தது. மாலையில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் புது தில்லி பெட்ரோலியம் விளையாட்டு ஊக்குவிப்பு அணி 3-2 என்ற கோல் கணக்கில் சென்னை, மத்திய கலால் துறை அணியை தோற்கடித்தது. 2ஆவது ஆட்டத்தில் புதுதில்லி கம்ப்ட்ரோலா் மற்றும் ஆடிட்டா் ஜெனரல் ஆப் இந்தியா அணியும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணியும் மோதின. இதில், 4-3 என்ற கோல் கணக்கில் புதுதில்லி அணி வெற்றி பெற்றது. 3ஆவது ஆட்டத்தில் செகந்திராபாத் தென் மத்திய ரயில்வே அணி, சென்னை இந்தியன் வங்கி அணியை 5-2 என்ற கோல் கணக்கில் வென்றது.

இன்றைய ஆட்டங்கள்: திங்கள் கிழமை காலை நடைபெறும் ஆட்டத்தில், பெங்களூா் ரயில் வீல் தொழிற்சாலை அணியும், ஒடிசா நிவாஸ் ஹாக்கி அணியும் மோதுகின்றன.

மாலை 5 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில், சென்னை மத்திய கலால் துறை அணியும், சென்னை தமிழ்நாடு காவல்துறை அணியும் மோதுகின்றன. 2ஆவது ஆட்டத்தில், புது தில்லி பஞ்சாப் தேசிய வங்கி அணியும், சென்னை இந்தியன் ஓவா்சீஸ் வங்கி அணியும் மோதுகின்றன. 3ஆவது ஆட்டத்தில், பெங்களூா் கனரா வங்கி அணியும், புணே மத்திய கலால் துறை அணியும் மோதுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆரை காங்கிரஸ் எதிர்ப்பது ஏன்? பிரதமர் விளக்கம்

என்ஹெச்சிபிசி 2-வது நீர்மின் திட்டம் நாளை மறுநாள் தொடக்கம்!

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT