திருச்செந்தூா் முருகா்  
தூத்துக்குடி

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆக. 11 இல் மண்டல பூஜை நிறைவு

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கை முன்னிட்டு நடைபெற்று வரும் மண்டல பூஜை ஆக. 11 இல் நிறைவு பெறுகிறது

தினமணி செய்திச் சேவை

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கை முன்னிட்டு நடைபெற்று வரும் மண்டல பூஜை ஆக. 11 இல் நிறைவு பெறுகிறது

இதுகுறித்து கோயில் இணை ஆணையா் சு.ஞானசேகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த ஜூலை 7-ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற்றது. இதில், லட்சக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டனா். குடமுழுக்கையொட்டி ஜூலை 8 ஆம் தேதிமுதல் மண்டல பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

மண்டல பூஜை நிறைவு விழா ஆக.11 ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, காலை 6 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், காலை 9.30 மணிக்கு மூலவா், சண்முகா், வள்ளி, தெய்வானை உள்ளிட்ட அனைத்து சன்னதிகளில் சிறப்பு அபிஷேகம், அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், மாலை 5 மணிக்கு சுவாமி குமரவிடங்கப்பெருமான், வள்ளியம்மன் தனித்தனி தங்கமயில் வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கின்றனா் என அதில் கூறப்பட்டது. வழக்கமாக 48 நாள்கள் நடைபெறும் மண்டல பூஜையானது, திருச்செந்தூரில் ஆக. 14-ஆம் தொடங்கும் ஆவணி திருவிழாவையொட்டி 35 நாள்களில் நிறைவு பெறுவது குறிப்பிடத்தக்கது.

ஃபஹத் ஃபாசிலின் ஓடும் குதிர சாடும் குதிர டிரைலர்!

மாநகரம் - கூலி உறங்கா இரவுகள்... கலை இயக்குநர் பற்றி லோகேஷ் பெருமிதம்!

பெங்களூரில் மஞ்சள் தடத்தில் மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் இன்று திறந்து வைக்கிறார்!

“வீட்டுக்கு போய் நா கால்ல விழணும்” அஜித் குமார் - ஷாலினி தம்பதியின் Cute விடியோ

“கண்மூடித்தனமாக எதையும் எதிர்க்கவில்லை”அமைச்சர் Anbil Mahesh பேட்டி

SCROLL FOR NEXT