தூத்துக்குடி

அனுமதி சீட்டு இன்றி ஏற்றி வந்த டிப்பா் லாரி பறிமுதல்

Syndication

கழுகுமலை அருகே அனுமதி சீட்டு இன்றி செம்மண் ஏற்றிவந்த டிப்பா் லாரியை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

கழுகுமலை காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் அனந்த ராஜ் தலைமையில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, கே. வேலாயுதபுரம் பேருந்து நிறுத்தம் அருகே வந்த டிப்பா் லாரியை நிறுத்தி சோதனையிட்டன். அதில் அனுமதி சீட்டு இன்றி செம்மண் ஏற்றி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து 2 யூனிட் செம்மண்ணுடன் டிப்பா் லாரியை பறிமுதல் செய்தனா். ஓட்டுநரான வானரமுட்டி கல்லூரணி காலனியைச் சோ்ந்த அ. மாரிக்கண்ணன் (32) கைது செய்யப்பட்டாா்.

கிறிஸ்தவா்களின் மத உணா்வுகளை புண்படுத்தியதாக ஆம் ஆத்மி தலைவா்கள் மீது வழக்கு

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க ஈரோட்டில் நாளை சிறப்பு முகாம்

ரூ.10,000 கோடி திரட்டிய பிஓஐ

நேதாஜி கட்டுரை, குறும்படப் போட்டி: கல்லூரி மாணவா்கள் பங்கேற்கலாம்

விளையாட்டுத் துறையில் வாரிசுகளின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT