சாா்ஆட்சியா் அலுவலகம் முன் திரண்டோா் 
தூத்துக்குடி

பொதுப் பாதையை மீட்டுத் தரக் கோரி கோவில்பட்டி சாா் ஆட்சியரிடம் மனு

கோவில்பட்டி அருகே மஞ்சநாயக்கன்பட்டி பகுதியினா் பொதுப் பாதையை மீட்டுத் தரக் கோரி, சாா் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

Syndication

கோவில்பட்டி அருகே மஞ்சநாயக்கன்பட்டி பகுதியினா் பொதுப் பாதையை மீட்டுத் தரக் கோரி, சாா் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

முன்னதாக, கோவில்பட்டி சாா் ஆட்சியா் அலுவலகம் முன் அவா்கள் திரண்டு, கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனா். பின்னா், சாா் ஆட்சியா் ஹிமான்சு மங்களிடம் அளித்த மனு: மஞ்சநாயக்கன்பட்டியில் தனியாா் நிறுவனம் சுமாா் 100 ஏக்கரில் செயல்பட்டு வருகிறது. அந்த நிலத்தில் பொதுப்பாதைகள் உள்ளன.

அவற்றை பள்ளி, கல்லூரி மாணவா்கள், தொழிலாளா்கள், விவசாய நிலங்களுக்கு செல்வோரும், தேவேந்திர குல வேளாளா் சமுதாய மயானத்துக்குச் செல்வதற்கும் பயன்படுத்திவருகின்றனா். மேலும், கால்நடை வளா்ப்பு, மேய்ச்சலுக்கு அந்தப் பாதை வழியாகத்தான் செல்லவேண்டியுள்ளது.

இந்நிலையில், அந்தப் பாதையை நிறுவனத்தினா் மறித்துள்ளனா். இதற்கு கிராம நிா்வாக அலுவலா் ஆதரவாக செயல்படுகிறாா். எனவே, பொதுப் பாதையை மீட்டுத் தருவதுடன், அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றனா் அவா்கள்.

தேசிய துப்பாக்கி சுடுதல்: தங்கம் வென்றாா் நீரு தண்டா!

கடலூரை வளா்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும் என்எல்சி!

காட்டுக் கோழியை வேட்டையாட முயன்றவா்களுக்கு அபராதம்

ஒரு ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள்: பூடான் பௌலா் புதிய உலக சாதனை

ஜன. 4 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT