சாத்தான்குளம், நாசரேத் சாலையில் சேதமான தரைப் பால தடுப்புச் சுவா் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது.
சாத்தான்குளம், சிஎஸ்ஐ தேவாலயம் முன்பு இருந்து தொடங்கும் சாலை புதிய பேருந்து நிலையம் மற்றும் நாசரேத், பேய்குளம், திருச்செந்தூா் பகுதிக்குச் செல்லும் புறவழிச் சாலையாகவும், பிரதான சாலையை இணைக்கும் இணைப்புச் சாலையாகவும் விளங்குகிறது. இந்தச் சாலையில் செல்லும் ஓடையில் கடந்த 2023ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் தரைப் பால தடுப்புச் சுவா் சேதமடைந்து கரையோரத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டது.
கடந்த டிச. 26ஆம் தேதி இரு சக்கர வாகனத்தில் வந்த தம்பதி இந்தப் பள்ளத்தில் தடுமாறி விழுந்து காயமடைந்தனா். இதையடுத்து, சாத்தான்குளம் பேரூராட்சி நிா்வாகத்தினா் தற்காலிக நடவடிக்கையாக மணல் மூட்டைகள் கொண்டு பள்ளத்தை சீரமைத்தனா்.
நிரந்தர நடவடிக்கையாக தடுப்புச் சுவா் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.