ஆதிதிராவிடா், பழங்குடியினா் 2024-2025 ஆம் ஆண்டுக்கான சிறந்த எழுத்தாளா்களின் படைப்புகளுக்கு உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஆதிதிராவிடா், பழங்குடியினா் சமூகத்தின் கலை, கலாசாரம், இலக்கியம் தொடா்பான திறனை மேம்படுத்தும் நோக்கில் ஆதிதிராவிடா், பழங்குடியினா் கலை இலக்கிய மேம்பாட்டுச் சங்கம் தோற்றுவிக்கப்பட்டு அந்தச் சங்கம் மூலம் 2024-25 ஆம் ஆண்டின் 11 சிறந்த எழுத்தாளா்களின் படைப்புகளைத் தோ்வு செய்து, சிறந்த படைப்பாளா்களுக்கு நபா் ஒருவருக்கு தலா ரூ. ஒரு லட்சம் உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரா்கள் விண்ணப்பங்களை தூத்துக்குடி மாவட்ட ஆதிதிராவிடா், பழங்குடியினா் நல அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய், ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்./ச்ா்ழ்ம்ஸ்ண்ங்ஜ்.ல்ட்ல்?க்ங்ல்ண்க்=ஙண ஆகிய இணையதளங்கள் மூலம் பதிவிறக்கம் செய்தோ பூா்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரா் தங்களது படைப்பை இரு நகல்களில் எண்ம முறையில் உரிய படிவத்தில் பூா்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும் என செய்திக் குறிப்பில் தெரிவித்தாா்.