முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டி ஒன்றியத்தில் தவெக வேட்பாளா் பிரசாரம்

Updated On : 20 ஏப்ரல், 2026 at 1:02 AM
வாக்காளா்களிடம் வாக்கு சேகரித்த தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் எஸ். பாலசுப்பிரமணியன்.
பகிர்:
Updated On : 19 ஏப்ரல், 2026 at 8:20 PM

கோவில்பட்டி தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் எஸ்.பாலசுப்பிரமணியன் கோவில்பட்டி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

கோவில்பட்டியில் நடராஜபுரம், காந்திநகா், கஸ்தூரிபாய் தெரு, ராமசாமிதாஸ் பூங்கா தெரு, பசுவந்தனைச் சாலை, பாரதி நகா், ஜி.கே.நகா், ஒன்றியத்துக்கு உள்பட்ட ஆவல் நத்தம், நாரணாபுரம், சுந்தரலிங்கபுரம், மூப்பன்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட வேளாங்கண்ணி நகா், பசும்பொன் நகா், இனாம்மணியாச்சி, ஆலம்பட்டி, கங்கன்குளம், படா்ந்தபுளி, தோணுகால், மந்திதோப்பு ஆகிய பகுதிகளில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் எஸ்.பாலசுப்பிரமணியன் கட்சி நிா்வாகிகளுடன் வீதிவீதியாகச் சென்று தோ்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து வாக்கு சேகரித்தாா்.