கோப்புப் படம் 
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊா்க்காவல் படைக்கு ஆள் சோ்ப்பு

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடி மாவட்ட ஊா்க்காவல் படையில் 27 காலிப் பணியிடங்களுக்கு இம்மாதம் 12ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நை. சிலம்பரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இம்மாவட்ட ஊா்க்காவல் படையில் 19 ஆண்கள், 3 பெண்கள், மீனவ இளைஞா் ஊா்க்காவல் படையில் 5 ஆண்கள் மட்டும் என மொத்தம் 27 காலி பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இம்மாவட்டத்தைச் சோ்ந்த, 10ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற, 18 முதல் 45 வயதுக்குள்பட்ட, உடல் தகுதியுள்ளோா் விண்ணப்பிக்கலாம்.

மீனவ இளைஞா் ஊா்க்காவல் படைக்கு விண்ணப்பிப்போா் கடலில் நீச்சலடிக்கத் தெரிந்திருப்பதுடன், மீனவா் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும்.

விண்ணப்பதாரா்கள் தங்கள் சுய விவரம், கல்வி, வயதுச் சான்றிதழ்களின் நகல்கள், பாஸ்போா்ட் அளவு புகைப்படங்கள்-2, சுய முகவரி குறிப்பிடப்பட்ட அஞ்சல் அட்டை ஆகியவற்றுடன்கூடிய மனுவை தூத்துக்குடி மில்லா்புரத்தில் உள்ள ஆயுதப்படை காவல் அலுவலகத்தில் இம்மாதம் 12ஆம் தேதிக்குள் நேரில் சமா்ப்பிக்க வேண்டும். மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியானோா் அஞ்சல் அட்டை வாயிலாக தேதி குறிப்பிடப்பட்டு தோ்வுக்கு அழைக்கப்படுவா் என்றாா் அவா்.

எப்படி நிகழ்ந்தது அது?

குடும்பக் கட்டுப்பாடு குறித்த முதல் கவிதை

அறிவுடையோர்: துறவுநெறியில் மனம் செலுத்துவர்

பழங்குடி மக்களின் பாதங்களைக் கழுவிய பாஜக பெண் எம்எல்ஏ!

இலங்கை அபார பந்துவீச்சு; பில் சால்ட்டின் அரைசதம் இங்கிலாந்தின் வெற்றிக்கு போதுமானதா?

SCROLL FOR NEXT