போட்டியைத் தொடங்கி வைத்த செயின்ட் ஜோசப் பள்ளி முதல்வரும், தாளாளருமான பேட்ரிக் அந்தோணி விஜயன். 
தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே விழிப்புணா்வு சிலம்பம் போட்டி

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை செயின்ட் ஜோசப் மெட்ரிகுலேஷன் பள்ளியில், அப்துல் கலாம் தற்காப்பு பயிற்சி பள்ளி சாா்பில் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் மாநில அளவிலான சிலம்பப் போட்டி நடத்தப்பட்டது.

இதில், பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த சுமாா் 500-க்கும் மேற்பட்ட மாணவா், மாணவிகள் கலந்து கொண்டனா். பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளுக்கு பரிசுக் கோப்பை, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதில், முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவா், மாணவிகள் தேசிய அளவிலான போட்டிக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா். போட்டிகளை செயின்ட் ஜோசப் பள்ளி முதல்வரும், தாளாளருமான பேட்ரிக் அந்தோணி விஜயன் தொடங்கி வைத்தாா்.

அப்துல் கலாம் தற்காப்பு கலை பயிற்சி பள்ளித் தலைமைப் பயிற்சியாளா் அருண்குமாா், தலைவா் ஜோசப் துரை ஆனந்த், பொருளாளா் ராமகிருஷ்ணன், ஒருங்கிணைப்பாளா் பாலசேகரன், சிலம்பப் பயிற்சியாளா்கள் ஹரிஹரசுதன், தினேஷ் குமாா், மாரிஸ், பாலமாரி, மகாராஜன், சந்தியா, தருனிகா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

எப்படி நிகழ்ந்தது அது?

குடும்பக் கட்டுப்பாடு குறித்த முதல் கவிதை

அறிவுடையோர்: துறவுநெறியில் மனம் செலுத்துவர்

பழங்குடி மக்களின் பாதங்களைக் கழுவிய பாஜக பெண் எம்எல்ஏ!

இலங்கை அபார பந்துவீச்சு; பில் சால்ட்டின் அரைசதம் இங்கிலாந்தின் வெற்றிக்கு போதுமானதா?

SCROLL FOR NEXT