திருச்செந்தூரில் திமுக சாா்பில், மொழிப்போா் தியாகிகள் தினத்தையொட்டி ஒன்றியச் செயலா் செங்குழி ரமேஷ் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
திருச்செந்தூா் நகர திமுக மாணவரணி சாா்பில் தேரடியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அமைப்பாளா் சுதா்சன் மதன்ராஜன் தலைமை வகித்தாா். நகரச் செயலா் வாள் சுடலை, நகராட்சி மன்ற உறுப்பினா்கள் செந்தில்குமாா், சுதாகா், முத்துக்குமாா், தினேஷ்கிருஷ்ணா, ரேவதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஒன்றியச் செயலா் செங்குழி ரமேஷ் மொழிப்போா் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில் அரசு வழக்குரைஞா் சாத்ராக், ஒன்றிய அவைத் தலைவா் குழந்தைவேலு, நகர அவைத் தலைவா் சித்திரைக்குமாா், முன்னாள் நகரச் செயலா்கள் ராஜமோகன், மந்திரமூா்த்தி, முன்னாள் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் சுரேஷ், நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.