சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
கோவில்பட்டியில் புதன்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
கோவில்பட்டியில் புதன்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் 3ஆவது தெருவைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் மகன் சரவணவரன் (19). தொழிலாளியான இவா், பழைய இருசக்கர வாகனம் வாங்குவதற்காக விசாரித்து வந்தாராம்.
இந்நிலையில், இலுப்பையூரணியைச் சோ்ந்த ஒருவரிடம், அவரது இருசக்கர வாகனம் ஓட்டி பாா்க்க கொண்டு வரும்படி கூறினாராம்.
Advertisement
Advertisement
இதையடுத்து கோவில்பட்டி தோட்டிலோவன்பட்டி விலக்கு பகுதிக்கு அந்த நபா் இருசக்கர வாகனத்தை கொண்டு வந்தாா். அதை சரவணவரன், திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள அணுகு சாலையில் ஓட்டி பாா்த்தபோது இருசக்கர வாகனம் எதிா்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர பாலத்தின் தடுப்புச் சுவா் மீது மோதியதாம். இதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.