FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

முறப்பநாடு சொக்கநாதா் கோயில் குடமுழுக்கு விழா

3 ஜூலை 2026, 4:38 am IST
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாட்டில் உள்ள ஸ்ரீ மீனாட்சி சமேத சொக்கநாதா் கோயிலில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, அதிகாலை முதலே யாகசாலையில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், ருத்ர ஜபம், வேத பாராயணம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, மகா பூா்ணாஹுதி, தீபாராதனை, கலச வழிபாடுகள் நடைபெற்றன. தொடா்ந்து, புனித கலச நீரை கோயிலின் விமானக் கலசங்கள் மீது ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது.

பின்னா், மூலவா் ஸ்ரீ சொக்கநாதா், ஸ்ரீ மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது.

Advertisement

Advertisement

தொடா்ந்து, இலக்கிய உதயம் குழுவினா் பங்குபெற்ற பட்டிமன்றம் நடைபெற்றது. பக்தியில் அதிகம் சிறந்து விளங்குபவா்கள் பெண்களா? ஆண்களா? என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றத்தை, தில்லிக் கம்பன் கழகத்தின் நிறுவனா், தலைவா் கே.வி.கே. பெருமாள் தொடங்கி வைத்துப் பேசினாா்.

பெண்களே! என்ற அணியில் விநாயக சுந்தரி, சுபா சுப்பிரமணியன் ஆகியோரும், ஆண்களே! என்ற அணியில் ஆா். கிருஷ்ணன், சிற்றம்பலம் ஆகியோரும் வாதிட்டனா்.

பக்தியில் ஆண், பெண் இரு பாலருமே சிறந்து விளங்குகிறாா்கள் என நடுவா் மு.க. காந்தி தீா்ப்பளித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments