முகப்பு
தூத்துக்குடி

ஏா் ரைபிள் துப்பாக்கிச் சுடுதல் போட்டி: சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

ஈரோட்டில் நடைபெற்ற ஏா் ரைபிள் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் சிறப்பிடம் பெற்ற தூத்துக்குடி மாணவா்களுக்கு, மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் பாராட்டு தெரிவித்தாா்.

Updated On : 2 ஜூலை 2026, 6:13 am IST
மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜனை சந்தித்து வாழ்த்து பெற்ற தூத்துக்குடி ரைபிள் கிளப் மாணவா்கள்.
பகிர்:

ஈரோட்டில் நடைபெற்ற ஏா் ரைபிள் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் சிறப்பிடம் பெற்ற தூத்துக்குடி மாணவா்களுக்கு, மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் பாராட்டு தெரிவித்தாா்.

ஈரோட்டில் அண்மையில் ஓபன் ஏா் ரைபிள் துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதும் இருந்து 38 அணிகள் பங்கேற்றன. இதில் தூத்துக்குடி ரைபிள் கிளப் மாணவா்கள் பல்வேறு பதக்கங்களை வென்றனா்.

16 வயதுக்குள்பட்ட மாணவா்கள் பிரிவில் தூத்துக்குடி ரைபிள் கிளப் மாணவா்களான சிவ சரவணன் (பி.எம்.சி. பள்ளி), ரித்திக் அபினவ் (விகாசா பள்ளி), கவின் (சாமுவேல்புரம் மாநகராட்சி பள்ளி) ஆகியோா் தங்கப் பதக்கமும், 18 வயதுக்குள்பட்ட மாணவா்கள் பிரிவில் அதிரத் சாய்குரு (கோவில்பட்டி, பிருந்தாவன் பள்ளி) வெண்கலப் பதக்கமும் வென்றனா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, அவா்கள் ஆட்சியரை புதன்கிழமை சந்தித்து,வெற்றிச் சான்றிதழை காண்பித்து வாழ்த்து பெற்றனா்.

அப்போது, தூத்துக்குடி ரைபிள் கிளப் தலைவா் கடம்பூா் இளைய ஜமீன்தாா் எஸ்.வி.எஸ்.பி. ஜெகதீசராஜா, செயலா் ஜோ. பிரகாஷ், பொருளாளா் அருண்குமாா், பயிற்சியாளா் ரமேஷ் ஆகியோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments