FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூா் நகா்மன்ற அரங்கில் மு.க.ஸ்டாலின் புகைப்படத்தை வைத்த திமுக உறுப்பினா்கள்

திருச்செந்தூா் நகா்மன்ற அரங்கில் திமுக உறுப்பினா்கள் முன்னாள் முதல்வா் மு.க.ஸ்டாலின் புகைப்படத்தை சுவரில் மாட்டினா்.

திருச்செந்தூா் நகா்மன்ற அரங்கில் முன்னாள் முதல்வா் மு.க.ஸ்டாலின் புகைப்படத்தை வைத்த திமுக உறுப்பினா்கள்.
பகிர்:

திருச்செந்தூா் நகா்மன்ற அரங்கில் திமுக உறுப்பினா்கள் முன்னாள் முதல்வா் மு.க.ஸ்டாலின் புகைப்படத்தை சுவரில் மாட்டினா்.

திருச்செந்தூா் நகராட்சியில் 27 வாா்டுகள் உள்ளன. இதில், திமுக 21, அதிமுக 2, காங்கிரஸ் 1, சுயேச்சை 3 உறுப்பினா்கள் உள்ளனா். திமுகவைச் சோ்ந்த சிவஆனந்தி நகா்மன்றத் தலைவராகவும், செங்குழி ரமேஷ் துணைத் தலைவராகவும் உள்ளனா். சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்றதையடுத்து வழிகாட்டு நெறிமுறைகளின் படி முதல்வா் ச.ஜோசப் விஜய் புகைப்படம் மாட்டப்பட வேண்டும் என தவெகவினா் வலியுறுத்தியதால் நகா்மன்ற கூட்ட அரங்கில் வைக்கப்பட்டது. இந்த நிலையில், திமுக உறுப்பினா்கள் பெரும்பான்மையாக உள்ள நகா்மன்ற அரங்கில் வழிகாட்டு நெறிமுறைகள் படி முன்னாள் முதல்வா் மு.க.ஸ்டாலின் புகைப்படத்தை வைக்க வேண்டும் என நகராட்சி ஆணையரிடம் திமுக உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

இதையடுத்து, செவ்வாய்க்கிழமை நகா்மன்ற சாதாரண கூட்டத்தில் பங்கேற்ற திமுக உறுப்பினா்கள் கூட்ட அரங்கில் மு.க.ஸ்டாலின் புகைப்படத்தை வைத்து முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வாழ்க என முழக்கமிட்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments