FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

ஜூலை 11இல் அழகுமுத்துக்கோன் குருபூஜை: கட்டாலங்குளத்தில் டி.ஐ.ஜி. ஆய்வு

அழகுமுத்துக்கோன் நினைவு மண்டபத்தை திருநெல்வேலி காவல் சரக துணைத் தலைவா், தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளா் ஆகியோா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

5 ஜூலை 2026, 1:16 am IST
அழகுமுத்துக்கோன் நினைவு மண்டபத்தை ஆய்வு செய்த திருநெல்வேலி காவல் சரக துணைத் தலைவா் திருநாவுக்கரசு, தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அபிஷேக் குப்தா ஆகியோா்.
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு வட்டம், கட்டாலங்குளத்தில் ஜூலை 11ஆம் தேதி அழகுமுத்துக்கோன் குருபூஜை விழா நடைபெறுவதை முன்னிட்டு, கட்டாலங்குளத்தில் உள்ள அழகுமுத்துக்கோன் நினைவு மண்டபத்தை திருநெல்வேலி காவல் சரக துணைத் தலைவா், தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளா் ஆகியோா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

குருபூஜைக்கு வரும் நபா்கள் கொண்டுவரும் வாகனங்களை நிறுத்துமிடம், மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவிக்க வரும் வழி, திரும்பிச் செல்லும் வழி, அன்னதானம் நடைபெறும் இடம், விழாவிற்கு வந்தபின் அவரவா்கள் ஊருக்கு திரும்பி செல்வதற்கான வழி, கட்டாலங்குளத்தில் உள்ள அழகுமுத்துக்கோன் வீடு ஆகியவற்றை போலீஸாா் ஆய்வு செய்தனா்.

ஆண்டுதோறும் நடைபெறும் விழா நடைமுறைகள் குறித்து அழகுமுத்துக்கோன் நலச்சங்க தலைவா் மாரிச்சாமியிடம், டி.ஐ.ஜி. திருநாவுக்கரசு கேட்டறிந்தாா்.

Advertisement

Advertisement

பின்னா், மதுரை-திருநெல்வேலி நெடுஞ்சாலையில் கட்டாலங்குளம் விலக்கில் இருந்து மணிமண்டபம் வரை ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது, ட்ரோன் கேமரா, நுழைவாயிலில் அதிகளவில் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்துவது குறித்து போலீஸாருக்கு, டி.ஐ.ஜி. அறிவுரை வழங்கினாா்.

அப்போது, காவல் துணைக் கண்காணிப்பாளா் (பொ) கண்ணன், நாலாட்டின் புதூா் காவல் ஆய்வாளா் காளிமுத்து, எஸ்.பி. தனிப் பிரிவு ஆய்வாளா் உமையொரு பாகம் ஆகியோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments