வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்ததில் முதியவா் உயிரிழப்பு
திருச்செந்தூரில் வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்து முதியவா் உயிரிழந்தாா்.
திருச்செந்தூரில் வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்து முதியவா் உயிரிழந்தாா்.
திருச்செந்தூா் கீழரதவீதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி ஐயா் மகன் ராமநாதன் (64). திருமணமாகாத இவா் வீட்டில் தனியாக வசித்து வந்தாா்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை, வீட்டின் மாடியை சுத்தம் செய்வதற்காக சென்றபோது நிலை தடுமாறி பின்னால் தோட்டத்தில் விழுந்தாராம். இதில் பலத்த காயமடைந்த ராமநாதன் உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து தகவலறிந்த கோயில் காவல் ஆய்வாளா் கனகராஜன் தலைமையிலான போலீஸாா், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.