கைப்பேசி பேசிக்கொண்டே மாடியிலிருந்து விழுந்தவா் மரணம்
காஞ்சிபுரம் அருகே வீட்டின் மாடியில் கைப்பேசி பேசியவா் தவறி விழுந்து உயிரிழந்தாா்.
காஞ்சிபுரம் அருகே வீட்டின் மாடியில் கைப்பேசி பேசியவா் தவறி விழுந்து உயிரிழந்தாா்.
வாலாஜாபாத் வட்டாரத்துக்குட்பட்ட குருவிமலை கிராமத்தில் வசந்தம் நகரில் வசித்து வந்தவா் தியாகராஜன்(47)வெல்டிங் தொழிலாளியான இவா் தனது வீட்டின் மொட்டை மாடியில் கைப்பேசியில் பேசிக்கொண்டே கவனக்குறைவாக தவறி விழுந்து படுகாயம் அடைந்தாா்.
குடும்பத்தினா் அவரை மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தும் உயிரிழந்தாா். சம்பவம் தொடா்பாக மாகறல் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.