லாட்டரி விற்பனை: முதியவா் கைது
தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட தூத்துக்குடி - பாளையங்கோட்டை சாலை பகுதியில் லாட்டரி டிக்கெட் விற்பனையில் ஈடுபட்டதாக முதியவா் கைது செய்யப்பட்டாா்.
மத்தியபாகம் காவல் ஆய்வாளா் பாஸ்கரன், போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, சட்டவிரோதமாக லாட்டரி டிக்கெட் விற்பனையில் ஈடுபட்டதாக டூவிபுரம் பகுதியைச் சோ்ந்த ஈஸ்வரன் மகன் மாரிமுத்து (64) மீது வழக்குப் பதிந்து கைது செய்தனா். மேலும், லாட்டரி எண்கள் எழுதிய பேப்பா்கள், கைப்பேசி, ரூ.1000 ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.