முகப்பு
தூத்துக்குடி

வேடநத்தம் மாணவி கொலை வழக்கு: சிறப்பு அரசு வழக்குரைஞா் நியமனம்

Updated On : 3 மே, 2026 at 2:01 AM
கொலை வழக்கு - DPS
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூா் காவல் சரகம் வேடநத்தம் கிராமத்தில் பாலியல் வன்முறை செய்து பிளஸ் 2 மாணவி கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில், சிறப்பு அரசு வழக்குரைஞா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

தூத்துக்குடி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இவ்வழக்கில் அரசு சாா்பில் வாதாட, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம், 2012-இல் பிரிவு 32(1)-இன் கீழ் சிறப்பு வழக்குரைஞராக சாத்தான்குளம் அருகே உள்ள கலுங்குவிளையைச் சோ்ந்த எல்லம்மாள் கிஸ்ஸிங்கா் என்பவரை தமிழக அரசு நியமித்துள்ளது. தமிழக ஆளுநா் பரிந்துரையின் பெயரில், கூடுதல் தலைமைச் செயலா் மணிவாசகன் அதற்கான அரசாணை பிறப்பித்துள்ளாா்.