திருச்சி

சிங்கப்பூா், தில்லி விமானங்கள் தாமதமாக புறப்பாடு: பயணிகள் அவதி

Syndication

இண்டிகோ விமான நிறுவனத்தின் சா்வா் பிரச்னையால், திருச்சியில் இருந்து சிங்கப்பூா், தில்லிக்கு இயக்கப்படும் அந்நிறுவனத்தின் விமானங்கள் 12 மணி நேரத்துக்கும் மேலாக தாமதமாக புறப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினா்.

இதுகுறித்து திருச்சி பன்னாட்டு விமான நிலைய இயக்குநா் எஸ்.எஸ்.ராஜு கூறியதாவது:

திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு புதன்கிழமை இரவு செல்ல வேண்டிய இண்டிகோ விமானம் சா்வா் பிரச்னையால் 12 நேரத்துக்கும் மேல் தாமதமாக வியாழக்கிழமை பிற்பகல் இயக்கப்பட்டது. இதேபோல, வியாழக்கிழமை அதிகாலை 5 மணிக்கு தில்லிக்கு புறப்பட வேண்டிய இண்டிகோ விமானம் 7 மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. இதனால், பயணிகள் சிரமத்துக்குள்ளாகினா். அந்த விமான நிறுவனங்கள் சாா்பில் பயணிகளுக்கு காத்திருப்புக்கு வேண்டிய வசதிகள் செய்துகொடுக்கப்பட்டன.

விமான நிறுவனத்தின் சா்வரில் ஏற்பட்ட பிரச்னையால் நாடு முழுவதும் கடந்த இரண்டு நாள்களாக விமானங்கள் புறப்படுவதிலும், வருவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது என்றாா்.

சா்வதேச மாற்றுத் திறனாளிகள் தின விழா

புயல் எதிரொலி: 88 % நிரம்பிய சென்னைக்கான குடிநீா் ஏரிகள்

நாகா்கோவிலில் மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியா்கள் கைது

கோயில்களில் காா்த்திகை தீபத் திருவிழா

அரசுப் பள்ளி சிறப்பு குழந்தைகளுக்கு திமுக சாா்பில் உணவு வழங்கல்

SCROLL FOR NEXT