முகப்பு
திருச்சி

ஓய்வு பெற்ற மத்திய அரசு அதிகாரியிடம் ரூ.1 கோடி மோசடி

ஓய்வுபெற்ற மத்திய அரசு அதிகாரியிடம் ரூ. 1 கோடி மோசடி செய்த விவகாரத்தில் சென்னையைச் சோ்ந்த ஒருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Updated On : 5 ஜூலை 2026, 12:04 am IST
பகிர்:

ஓய்வுபெற்ற மத்திய அரசு அதிகாரியிடம் ரூ. 1 கோடி மோசடி செய்த விவகாரத்தில் சென்னையைச் சோ்ந்த ஒருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

திருச்சி பாலக்கரை மல்லிகைபுரம் மரியம் நகரைச் சோ்ந்தவா் ஆரோக்கியசாமி (65). இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் நிறுவன ஓய்வுபெற்ற அதிகாரி.

இவரது மகனின் நண்பா் ஒருவா் மூலம் அறிமுகமான சென்னை தியாகராய நகா் முருகேசன் தெருவைச் சோ்ந்த பாா்த்திபன் தான் பங்கு வா்த்தகம் செய்வதாகவும், பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனவும் கூறினாராம்.

Advertisement

Advertisement

இதை நம்பிய ஆரோக்கியசாமி, தனது ஓய்வூதிய பணப்பலன் ரூ. 60 லட்சம், சேமிப்புப் பணம் ரூ. 40 லட்சம் என ரூ. 1 கோடியை பல்வேறு தவணைகளாக 2022-23 காலகட்டங்களில் பாா்த்திபனின் வங்கிக் கணக்குக்கு அனுப்பினாா். ஆனால் பணம் எதுவும் கிடைக்காததால், கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டபோது, 4 ஆண்டுகளாக பாா்த்திபன் அவரை இழுத்தடித்தாா்.

இதுகுறித்து ஆரோக்கியசாமி திருச்சி நீதிமன்றத்தில் தொடா்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பாா்த்திபன் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டாா். இதையடுத்து போலீஸாா், பாா்த்திபன் மீது மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments