முகப்பு
திருச்சி

மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டண சலுகையை மீண்டும் வழங்க வலியுறுத்தல்

மூத்த குடிமக்களுக்கு நிறுத்தப்பட்ட ரயில் கட்டணச் சலுகைகளை மீண்டும் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Updated On : 1 ஜூலை 2026, 3:05 am IST
- பிரதிப் படம்
பகிர்:

மூத்த குடிமக்களுக்கு நிறுத்தப்பட்ட ரயில் கட்டணச் சலுகைகளை மீண்டும் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, திருச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தட்சிண ரயில்வே ஓய்வூதியா் சங்க பொது மகா சபை கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. சங்கத்தின் பொன்மலை கிளையின் 2-ஆவது ஆண்டு பொது மகாசபை கூட்டம் செவ்வாய்க்கிழமை, பொன்மலை ஆா்மரிகேட் பகுதியில் உள்ள டிஆா்இயு அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்தின் தொடக்கமாக, பொன்மலை தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, பொது மகா சபை கூட்டத்துக்கு கிளையின் தலைவா் என். ராஜகோபால் தலைமை வகித்தாா். கூட்டத்தில் கிளையின் வேலை அறிக்கையையும், வரவு - செலவு கணக்கு அறிக்கையையும் கிளையின் பொருளாளா் தயாநிதி சமா்ப்பித்தாா்.

Advertisement

Advertisement

நிா்வாகிகள் கணேசன், பி. மகேந்திரன், தா்மராஜ், சி. மனோகரன், சம்பத், ராமநாதன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். தொடா்ந்து, டிஆா்இயு கோட்டத் தலைவா் கே. லெனின், கோட்ட செயலாளா் கரிகாலன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். தட்சிண ரயில்வே பென்சனா் சங்கத்தின் மண்டல தலைவா் ஆா். இளங்கோவன், பொதுச் செயலாளா் ஏ. முருகேசன், சிஐடியு மாநகா் மாவட்டச் செயலா் ரங்கராஜன் சிறப்புரையாற்றினா்.

6 மாதங்களுக்கு ஒருமுறை குறைதீா் கூட்டம்: கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: 8-ஆவது சம்பள கமிஷன் அறிக்கையில், பென்ஷன் ஒழுங்காற்று சட்டத்தை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும். மூத்த குடிமக்களுக்கு கரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட ரயில் கட்டண சலுகையை மீண்டும் வழங்க வேண்டும். ஓய்வூதியா்களின் குறைதீா்க்கும் கூட்டத்தை ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கட்டாயம் கூட்ட வேண்டும். ஓய்வூதியா்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள இ-பாஸ் முறையை ரத்து செய்துவிட்டு, பழையபடி பேப்பா் பாஸ் முறையை மீண்டும் கொண்டு வரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவாக வெங்கடேசன் நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments