அரியலூர்

தா.பழூர் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட கீழமைக்கேல்பட்டி மக்கள்

DIN

அரியலூர் மாவட்டம், கீழமைக்கேல்பட்டி கிராமத்தில் சரியான குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து அக்கிராம மக்கள் தா.பழூர் ஒன்றிய அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர்.
தா.பழூர் ஒன்றியம், நாயகனைப்பிரியாள் ஊராட்சிக்குள்பட்டது கீழமைக்கேல்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் நிலையில், கடந்த சில மாதங்களாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
மேலும், கிராமத்திலுள்ள தெருவிளக்குகள் சரியாக எரியாததால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகிவந்தனர். மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் இந்த கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்களுக்கு வேலையும் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது. இக்கோரிக்கள் குறித்து பலமுறைபுகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால், கீழமைக்கேல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தா.பழூர் ஒன்றிய அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சம்பத், தவமணி பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் கோரிக்கைகளுக்குத் தீர்வு காணப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூஜையின் பயன்கள்!

‘வானம்’ ஜாஸ்மின்!

ராகுல் காந்தி, லாலு யாதவ் போட்டியிடுவதை தடுக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

விரும்பியது அருளும் அட்சயபுரீசுவரர்

சுனில் நரைன் கொல்கத்தாவின் சூப்பர் மேன்: ஷாருக்கான்

SCROLL FOR NEXT