அரியலூர்

அரியலூரில் சுகாதார  தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

DIN

அரியலூர் நகராட்சி அலுவலர்களைக் கண்டித்து அண்ணாசிலை அருகே ஏஐடியுசி சுகாதார தொழிலாளர் சங்கத்தினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், நகராட்சி அலுவலர்களின் தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்தும், புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அரசு விடுமுறை நாள்களில் சுகாதாரப் பணியாளர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். அல்லது முழுநேரப்பணி கொடுத்து இரட்டிப்பு ஊதியம் வழங்க வேண்டும். புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டையை விரைவில் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்துக்கு ஏஐடியுசி மாநில துணைப் பொதுச் செயலர் டி. தண்டபாணி தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருமானூர் ஒன்றியச் செயலாளர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

‘டாக்ஸிக்’ படத்தில் கரீனாவுக்கு பதிலாக நயன்தாரா?

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

SCROLL FOR NEXT