அரியலூர்

மதுக்கடையை மூடக்கோரி ஆட்சியரிடம் மனு

DIN

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே பூமுடையான் கிராமத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியர் க. லட்சுமிபிரியாவிடம் அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
அவர்கள் அளித்த மனு: பூமுடையான் கிராமத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவிகள் அவ்வழியே நடந்து செல்லமுடியவில்லை. மது அருந்த வருபவர்கள், பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொள்வதால் அவ்வழியே செல்ல முடியாமல் அச்சத்தில் உள்ளனர். மேலும் இங்குள்ள இளைஞர்கள், மாணவர்கள் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி வருவதால் உடனடியாக இந்த டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT