அரியலூர்

ஆசிரியர்களுக்கு கற்றல் மேம்பாடு பயிற்சி

DIN

கணினி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு எவ்வாறு கற்றலை மேம்படுத்துவது என்பது குறித்த பயிற்சி அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பயிற்சியை வட்டார வள மைய மேற்பார்வையாளர் செல்வராணி தொடக்கி வைத்து வைத்துப் பேசினார். அரியலூர் ஒன்றியத்துக்குட்பட்டபள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.  
பயிற்சியின் உட்கூறுகளாக கல்வியை எப்படி உலகளாவிய தகவல்களை பதிவிறக்கலாம் என்பதை பற்றியும், ஒவ்வொருவருக்கும் தங்கள் பாடத்திற்கு ஏற்ப பாடத்தை பதிவிறக்கி மாணவர்களுக்கு கற்றலை தெளிவான முறையில் ஏற்படுத்தலாம் என்பதை பற்றியும் எடுத்துக் கூறப்பட்டது.  ஆசிரியர்களின் சந்தேகங்களுக்கு பதிலளிக்கப்பட்டது. 
இப்பயிற்சியை வட்டார கல்வி அலுவலர்கள் ரவிச்சந்திரன், அமராவதி ஆகியோர் பார்வையிட்டனர்.   இடையத்தான்குடிஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ஆங்கில பட்டதாரி ஆசிரியை எமல்டாகுயின் மேரி பயிற்சி அளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT