அரியலூர்

"மொழி சார்ந்த பற்று தாயன்புக்கு நிகரானது'

DIN

மொழி சார்ந்த பற்றென்பது தாயன்புக்கு நிகரானது என்றனர் பேராசிரியர்கள்.
உலக தாய்மொழி தினத்தையொட்டி அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அடுத்த தத்தனூர் மீனாட்சி ராமசாமி கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் பேராசிரியர்கள் விநாயகி, ரேவதி, இளமதி, அபிநயா, சதீஸ்குமார், விக்னேஷ், மணிகண்டன், அழகுலெட்சுமி ஆகியோர் பேசுகையில், 
ஒவ்வொரு குழந்தையும்  தாய்மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே தாய்மொழி தினத்தின் முக்கியமான நோக்கம். மொழி  சார்ந்த பற்றென்பது, தாயன்புக்கு நிகரானது.  பல்வேறு சமூகங்களின் மொழி, பண்பாடு, கலாசாரம் என்பனவற்றின் தனித்தன்மையை பேணிப் பாதுகாக்கும்  நோக்கிலான கவசமாக இன்றைய நாள் கொண்டாடப்படுகிறது என்றனர்.
கல்லூரித் தாளாளர் எம்.ஆர். ரகுநாதன் தலைமை வகித்தார். கல்வியியல் கல்லூரி ஆலோசகர் க. வரதராஜன் முன்னிலை வகித்தார்.  பேராசிரியர் அறிவுவசந்த் வரவேற்றார். ஏற்பாடுகளை பேராசிரியர் வேல்முருகன் தலைமையிலான பேராசிரியார்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT