அரியலூர்

குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

DIN

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கீழப்பழுவூர் அருகேயுள்ள மலத்தான்குளம் கிராமத்தில் உள்ள காலனித்தெருவில், சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஊராட்சி சார்பில், மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த ஒருவாரமாக இப்பகுதி மக்களுக்கு சரிவர குடிநீர் விநியோகிக்கவில்லை எனக்கூறப்படுகிறது. இது குறித்து, ஊராட்சியில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லாததால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள்,அவ்வழியே வந்த அரசுப் பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து அங்கு வந்த கீழப்பழுவூர் போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறியதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT