அரியலூர்

திருமானூர் அருகேநூறு நாள் பணியாளர்கள் சாலை மறியல்

DIN


அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே வேலை செய்த நாள்களுக்கு கூலி கேட்டு மகாத்மா காந்தி  தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டப் பணியாளர்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருமானூர் ஊராட்சி ஒன்றியம், சுள்ளங்குடி ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் அந்த கிராமத்தைச் சேர்ந்த பணியாளர்களுக்கு வேலை வழங்கப்பட்டு வருகிறது. இதில் 150- க்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்து வருகின்றனர். 
இந்நிலையில், கடந்த 2 நாள்களாக (ஜூலை 11,12) வேலைக்கான உத்தரவு இல்லாமல் வேலை நடைபெற்றதாகத் தெரிகிறது. சனிக்கிழமை வேலை நடைபெற்ற போது, பணியாளர்களிடம் பணித்தள பொறுப்பாளர் கையெழுத்து பெற்றபோது சனிக்கிழமை மட்டும் கையெழுத்து போடச்சொல்லியுள்ளார். 
அப்போது, ஏற்கெனவே 2 நாள்கள் செய்த வேலைக்கு ஏன் கையெழுத்து பெறவில்லை என பணியாளர்கள் கேட்கையில், வேலைக்கான உத்தரவு இல்லாமல் செய்யப்பட்டது. எனவே, அதற்கு கூலி இல்லை எனக் கூறியதால், ஆத்திரமடைந்த மக்கள் ஏலாக்குறிச்சி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த திருமானூர் வட்டார வளர்ச்சி அலுவலர் நாராயணன் மற்றும் திருமானூர் போலீஸார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், கூலி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

SCROLL FOR NEXT