அரியலூர்

அரியலூரில் மக்கள் குறைதீர் கூட்டம்

DIN

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் 30 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கூட்டத்துக்கு ஆட்சியர் டி.ஜி.வினய் தலைமை வகித்து, பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அளித்த 529 கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் அவர்,  30 நபர்களுக்கு மாற்றுத்திறனாளி உதவித்தொகை, விதவை உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை மற்றும் முதிர்கன்னி உதவித்தொகை ஆகியவற்றை பெறுவதற்கான ஆணையினை வழங்கினார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கா.பொற்கொடி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன், சமூக பாதுகாப்புத் திட்ட துணை ஆட்சியர் நா.உமாமகேஸ்வரி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

உருவகேலி செய்யாதீர்கள்: 2 ஆண்டுகளாக நோயுடன் போராடும் மலையாள நடிகை!

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

SCROLL FOR NEXT