அரியலூர்

பி.சி., எம்.பி.சி., வகுப்பை சேர்ந்தவர்களுக்கு  தென்னூரில் இன்று கடன் வழங்கும் முகாம்

DIN

அரியலூர் மாவட்டம் தென்னூரில் புதன்கிழமை(ஜூலை 31) முதல் தொழிற்கடன் வழங்கும் திட்ட முகாமில் பி.சி., எம்.பி.சி வகுப்பினர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:  அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின மக்கள் தொழிற்கடன், தனிநபர் கடன், சுயஉதவி குழுக்களுக்கான சிறுகடன், கறவை மாடு வாங்க கடனுதவி பெற விரும்புவர்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய, கல்வியில் சிறந்த சிறுபான்மையின மாணவ, மாணவிகள் உயர் கல்வி பயில்வதற்கான கல்வி கடன் பெற விரும்புவர்கள் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் வட்டம் தென்னூர் கிராமத்திலுள்ள தென்னூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தில் புதன்கிழமை முதல் நடைபெறும் மேளாவில்  விண்ணப்பங்களைப் பெற்று அதனை பூர்த்தி செய்து பயன்பெறலாம். 
ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டும் கடனுதவி வழங்கப்படும்.  மேலும் விவரங்களுக்கு, அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை நேரில் அணுகவும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

8 வாக்குச் சாவடிகளில் மறுதோ்தல் நடத்த வலியுறுத்தி நீதிமன்றத்தில் வழக்கு

குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழா ஆலோசனைக் கூட்டம்

திருப்பத்தூரில் வெப்ப அலைகள் குறித்த ஆலோசனை கூட்டம்

பந்துவீச்சில் அசத்திய பெங்களூரு; 147 ரன்களுக்கு ஆட்டமிழந்த குஜராத் டைட்டன்ஸ்!

ஐஜிஐ மெட்ரோ நிலையம், பள்ளியில் பாதுகாப்பு ஒத்திகைப் பயிற்சி

SCROLL FOR NEXT