அரியலூர்

விவசாயிகள் கண்டுணர் சுற்றுலா

DIN

அரியலூர் மாவட்டம், திருமானூர் வட்டார விவசாயிகள், பார்ப்பனஞ்சேரி  கிராமத்திலுள்ள பசுமை கானகத்துக்கு கண்டுணர் சுற்றுலாவாக திங்கள்கிழமை அழைத்துச் செல்லப்பட்டனர். 
ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயம் எனும் தலைப்பின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மண்புழு உரம் தயாரிப்பு, அமிர்த கரைசல் தயாரித்தல், அசோலா உற்பத்தி, வேளாண்  பண்ணைக் கருவிகள் பயன்பாடு, நுண்ணீர் பாசனக் கருவிகள் அமைப்பதில் அவரது அனுபவங்கள் மற்றும் பயன்கள் குறித்து பண்ணையாளர் தமிழரசன் விளக்கினார்.
மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல் மற்றும் அதனை கட்டுபடுத்தும் முறைகள் குறித்து காணொலி காட்சி வாயிலாக அட்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர் கலைமதி எடுத்துரைத்தார்.
மேலும் சுற்றுலாவில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் குறித்து உதவி தொழில்நுட்ப மேலாளர் அன்பழகன் விளக்கினார். உதவி தொழில்நுட்ப மேலாளர் தி.வசந்தி, பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத் திட்டம் குறித்தும் அதன் பயன்கள் குறித்தும் விளக்கினார்.
மேலும் சுற்றுலாவில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நடப்பு காரிஃ
ப் 2019 பருவத்தில் காப்பீடு செய்யப்படக்கூடிய பயிர்கள் , அதற்கான பீரிமியம், காப்பீட்டுத் தொகை மற்றும் காலக்கெடு அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT