அரியலூர்

வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை இல்லாதவர்கள் கவனத்துக்கு...

DIN

மக்களவைத் தேர்தலில் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள், புகைப்படத்துடன் கூடிய 11 வகையான ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம் என  மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு முன்னர், தங்களது புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையை அளிக்க வேண்டும். இந்த அட்டை இல்லாதவர்கள்கடவுசீட்டு, ஓட்டுநர் உரிமம், மத்திய, மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களால் வரையறுக்கப்பட்ட தொழிலாளர்கள் தங்களது புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி , அஞ்சலகக் கணக்குப் புத்தகம், நிரந்தர கணக்கு எண் அட்டை (பான் கார்டு) தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப்பதிவாளாரால் வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அட்டை, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதியம் ஆவணம்,  ஆதார் அட்டை உள்பட 11 ஆவணங்களில் ஒன்றை அடையாள அட்டையாக பயன்படுத்தி வாக்களிக்கலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

SCROLL FOR NEXT