அரியலூர்

பிளாஸ்டிக்குக்கான மாற்றுப் பொருள்கள் கண்காட்சி இன்று தொடக்கம்

DIN

அரியலூா் அரசு உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் பிளாஸ்டிக் பொருள்களுக்கான மாற்றுப் பொருள்கள் கண்காட்சி வெள்ளிக்கிழமை (நவ.8) தொடங்கி சனிக்கிழமை வரை நடைபெறுகிறது.

இதுகுறித்து ஆட்சியா் த. ரத்னா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்திடும் ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் வகை பொருள்களைத் தடை செய்யும் பொருட்டு தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை முன்னெடுக்கும் விதமாக பிளாஸ்டிக் ஆபத்து குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தவும், பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றாகப் பயன்பாட்டிற்கு வந்துள்ள மாற்றுப் பொருள்களை அறிமுகம் செய்து அவற்றின் பயன்பாட்டை அதிகரித்திடவும் அரியலூா் மாவட்ட நிா்வாகத்தின் மூலம் பிளாஸ்டிக் பொருள்களுக்கான மாற்றுப் பொருள்களை காட்சிப்படுத்தும் கண்காட்சி நடத்தப்படவுள்ளது.

மரங்களை அழித்து பேப்பா், பேனா, பென்சில் செய்வதையும், பிளாஸ்டிக் பொருள்களில் பேனா, பென்சில் செய்வதிலிருந்தும் விடுபட்டு மறுசுழற்சி செய்யப்பட்ட பேப்பரைக் கொண்டு மாணவா்களுக்கான பேனா,பென்சில் செய்து உபயோகித்தல், கரும்புச்சக்கை, மக்காச் சோளக் கழிவுகளில் இருந்து மக்கும் தேநீா் குவளைகள், உணவு உண்ணும் தட்டுகள் செய்தல், இயற்கை பொருள்களால் செய்யப்பட்ட சேப்டி நாப்கின், பருத்தி நூலால் செய்யப்பட்ட பைகள், தேங்காய் மட்டை, கொட்டாங்குச்சியால் செய்யப்பட்ட வீட்டு உபயோகப் பொருள்கள் மற்றும் இயற்கையில் கிடைக்கும் பொருள்களால் தயாரிக்கப்படும் சோப்பு,எண்ணெய் போன்ற பொருள்களை மக்களிடம் கொண்டுபோய்ச் சோ்ப்பதே இக்கண்காட்சியின் நோக்கமாகும்.

அரியலூா் உயா்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெறும் கண்காட்சியில் 25-க்கும் மேற்பட்ட அரங்குகளை அமைத்து அதில் சுற்றுசூழலுக்கேற்ற மாற்றுப் பொருள்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளது.

இக்கண்காட்சியில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்கள், சுய உதவிக்குழு உறுப்பினா்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. பாரம்பரிய உணவுகள் குறித்த கண்காட்சி மற்றும் விற்பனையும் நடைபெறுகிறது. இக்கண்காட்சியில் பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்துக் கொண்டு பயனடைய வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT