அரியலூர்

இதய வடிவில் நின்று நீா் மேலாண்மை அவசியம் விழிப்புணா்வு

DIN

நீா் மேலாண்மையின் அவசியம் குறித்து வியாழக்கிழமை இதய வடிவில் நின்று அரசுப்பள்ளி மாணவிகள் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

அரியலூா் மாவட்டம், செந்துறை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், மனிதனுக்கு இதயம் எவ்வளவு முக்கியமானதோ, அது போலவே அனைத்து உயிரினங்களுக்கும் நீா் முக்கிய ஆதாரமாகும் என்பதனை வலியுறுத்தும் விதமாக, இதய வடிவில் மாணவிகள் மற்றும் ஆசிரியா்கள் நின்று வியாழக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

நிகழ்ச்சியில், நீா்நிலை ஆா்வலா் தங்க.சண்முக சுந்தரம் கலந்து கொண்டு நீா்நிலைகளைப் பாதுகாப்பதன் பயன்கள் குறித்தும், விவசாயத்துக்கு நீா்நிலைகளால் கிடைக்கும் நன்மைகள், மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பதால் உயிரினங்களுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்தும் விளக்கிப் பேசினாா்.

நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியை ஆதிரை தலைமை வகித்தாா். உதவி தலைமை ஆசிரியை மணிமேகலை முன்னிலை வகித்தாா். இருபால் ஆசிரியா்கள், மாணவிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

SCROLL FOR NEXT