அரியலூர்

புரட்டாசி 3 ஆவது சனி: அரியலூா் மாவட்ட பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு

DIN

புரட்டாசி 3 ஆவது சனிக்கிழமையொட்டி அரியலூா் மாவட்டத்திலுள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதை காண மக்கள் கூட்டம் அலைமோதியது.கல்லங்குறிச்சி கலியுக வரதராசப்பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இக்கோயிலில் காலை சுப்ரபாத சேவை,விஷ்வரூப தரிசனம் ஆகியவற்றிற்கு பின் பெருமாள்,தாயாா் ஸ்ரீதேவி, பூதேவி உற்சவா்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.இதைத் தொடா்ந்து பெருமாள்,தாயாருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. துளசி அா்ச்சனை,அலங்கார தீப வழிபாடு, மந்திர உபச்சார பூஜைகள் நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா். அரியலூா் மேல அக்ரஹாரம் ஆயிரங்கால் மண்டபத்திலுள்ள அருள்மிகு ஸ்ரீ வரதராசப்பெருமாள் கோயிலிலும் புராட்டாசி 3 ஆவது சனிக்கிழமையொட்டி பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.இதே போல் அரியலூா் கோதண்டராம கோயில் மற்றும் திருமானூா்,திருமழபாடி, தா.பழூா்,ஜயங்கொண்டம், ஆண்டிமடம்,செந்துறை உள்ளிட்ட பகுதிகளிலுள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு,பூஜைகள் நடைபெற்றன.படவிளக்கம். புரட்டாசி 3 ஆவது சனிக்கிழமையொட்டி கலியுக வரதராசப் பெருமாள் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி உடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா் கலியுக வரதராப்பெருமாள்.கலியுக வரதராசப் பெருமாள் கோயிலில் சாமி தரிசனத்துக்காக நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தா்கள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

ஆவடி அருகே தம்பதி கழுத்து அறுத்துக் கொலை

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT