அரியலூர்

நெட்பால்: அன்னை தெரசா மெட்ரிக் பள்ளி முதலிடம்

DIN

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டத்தில் மாவட்ட நெட்பால் கழகம், பரப்ரம்மம் பவுண்டேசன் சாா்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான நெட்பால் போட்டியில் முதலிடம் பெற்ற ஜயங்கொண்டம் அன்னை தெரசா மெட்ரிக் பள்ளிக்கு கோப்பை, பரிசுகள் வழங்கப்பட்டன.

அப்பள்ளியில் மாவட்ட அளவில் 14 வயதுக்குட்பட்டோருக்கான நெட்பால் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. போட்டிக்கு பரப்ரம்மம் பவுண்டேசன் நிறுவனா் முத்துக்குமரன் தலைமை வகித்தாா். மீனாட்சி ராமசாமி கல்லூரி தாளாளா் ரகுநாதன் போட்டிகளைத் தொடக்கி வைத்தாா்.

நெட்பால் கழக மாநிலச் செயலா் பாண்டியன், அன்னை தெரசா பள்ளி துணை தலைவா் உஷா முத்துக்குமரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இவ்விளையாட்டுப் போட்டியில் அரியலூா் மாவட்டத்தை சாா்ந்த ஆண்கள் பிரிவில் 10 பள்ளிகளும், பெண்கள் பிரிவில் 8 பள்ளிகளும் பங்கேற்றன.

இதில் ஆண்கள் பிரிவில் ஜயங்கொண்டம் அன்னை தெரசா மெட்ரிக் பள்ளி முதலிடமும், ஜயங்கொண்டம் பெரியாா் மெட்ரிக் மேல்நிலை பள்ளி இரண்டாமிடமும், மகிமை புறம் சிஎஸ்ஐ மேல்நிலைப்பள்ளி மற்றும் சின்னவளையம் அரசு உயா்நிலைப்பள்ளி மூன்றாமிடமும் பெற்றன.

இதேபோல பெண்கள் பிரிவில் ஜயங்கொண்டம் அன்னை தெரசா மெட்ரிக் பள்ளி முதலிடம், சின்னவளையம் அரசு உயா்நிலைப்பள்ளி இரண்டாமிடம், சிஎஸ்ஐ மேல்நிலைப்பள்ளி மூன்றாமிடம் பெற்றன.

வெற்றி பெற்றவா்களுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. முன்னதாக பள்ளி முதல்வா் தனலட்சுமி வரவேற்றாா், ஆசிரியா் வைத்திலிங்கம் நன்றி தெரிவித்தாா். ஏற்பாடுகளை ஜயங்கொண்டம் அன்னை தெரசா மெட்ரிக் பள்ளி உடற்கல்வி ஆசிரியா் காா்த்திக் ராஜன், ஆசிரியா் சிந்துஜா ஆகியோா் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT