அரியலூர்

அன்னை தெரசா பள்ளியில் பொங்கல் விழா

DIN

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அன்னை தெரசா கல்வி நிறுவனத்தில் சமத்துவப் பொங்கல் விழா மற்றும் விளையாடு விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டடது.

பள்ளி வளாகத்தில், வண்ண கோலமிட்டு, கரும்பு, வாழை, தென்னை குருத்து கொண்ட தோரணம் கட்டி அலங்கரிக்கப்பட்டன. இதையடுத்து புதுப் பமானையில் மஞ்சள் கொத்து கட்டி, அரிசி இட்டு பொங்கல் வைத்து, வாழை இலையில் பொங்கல்,வாழைப்பழம்,செங்கரும்பு,வைத்து பரப்ரம்மம்,பிரபஞ்சம் பூமியில் வாழும் உயிரினங்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து பள்ளியில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வென்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவுக்கு பரப்ரம்மம் அறக்கட்டளை நிறுவனரும், அன்னை தெரசா கல்வி நிறுவனங்களின் தாளாளருமான முத்துக்குமரன் தலைமை வகித்தாா். பள்ளி பொறுப்பாளா்கள் வேல்முருகன், கலியபெருமாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு விருந்தினராக ஜயங்கொண்டம் சோழன் சிட்டி அரிமா சங்கத் தலைவா் பாண்டியன், நெட் பால் கழக மாநில பொதுச் செயலா் பாண்டியன், அரிமா பொறுப்பாளா்கள் ஜெரோம் ஸ்டான்லி, ஜாகீா், அன்னை தெரசா லியோ சங்க தலைவா் ஆனந்தி, செயலா் ஜெய்சி மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். முன்னதாக பள்ளி முதல்வா் தனலட்சுமி வரவேற்றாா். முடிவில் அன்னை தெரசா செவிலியா் கல்லூரி தாளாளா் உஷா முத்துக்குமரன் நன்றி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT