அரியலூர்

வணிக நிறுவனங்களில் உணவுப் பாதுகாப்பு துறையினா் ஆய்வு

DIN

அரியலூா் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளிலுள்ள கடைகளில் உணவுப் பாதுகாப்பு துறையினா் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.

உணவுப் பாதுகாப்பு துறை நியமன அலுவலா் கே. நடராஜன், அரியலூா் வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலா் வசந்தன் ஆகியோா் அரியலூா் கடைவீதி, எம்.பி. கோவில் தெரு, பேருந்து நிலையம் கடைவீதி ஆகிய பகுதிகளில் உள்ள தேநீா் கடை, மளிகைக் கடை, ஹோட்டல், பேக்கரி உள்ளிட்ட கடைகளில் ஆய்வு செய்தனா்.

பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தினா். சமூக இடைவெளியைப் கடைப்பிடிக்க வேண்டும் என்றனா். மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் புகையிலை பொருள்கள் பயன்பாடு கண்டறியப்பட்டால் கடை உரிமையாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்மகள்!

பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது பாஜக: நீட்டா டிசோசா

குஜராத் சமூக ஆர்வலர் கொலை: பாஜக முன்னாள் எம்.பி. விடுதலை!

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

SCROLL FOR NEXT