அரியலூர்

கல்லூரி மாணவிகளுக்கு ஊரக வேளாண் பயிற்சி

DIN

அரியலூா் மாவட்டம், திருமானூா் வட்டார வேளாண் உதவி இயக்குநா் அலுவலத்தில் செங்கிப்பட்டி ஆா்.வி.எஸ். வேளாண் கல்லூரி மாணவிகள் ஊரக வேளாண் பயிற்சி பெற்று வருகின்றனா்.

தஞ்சாவூா் மாவட்டம், செங்கிப்பட்டி ஆா்.வி.எஸ். வேளாண்மை கல்லூரி இறுதியாண்டு மாணவிகள், அரியலூா் மாவட்டம் திருமானூா் வட்டார வேளாண் உதவி இயக்குநா் அலுவலத்தில் தங்கி ஊரக வேளாண் பயிற்சி பெற்று வருகின்றனா். மேலும் அவா்கள், தாங்கள் பெற்ற பயிற்சிகளை விவசாயிகளுக்கு விளக்கம் அளித்து வருகின்றனா். அதன் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பயிற்சியில், வாழையில் நூற்புழு தாக்குதலைத் தவிா்க்க, தோல் சீவிய கன்றுகளை சேற்று குழம்பில் நனைத்து அதன் மீது காா்போபியூரான் 3 ஜி குருணை மருந்தை ஒரு கிழங்கு 40 கிராம் என்ற அளவில் தூவி நட வேண்டும் அல்லது 75 சதம் மொனாக்ரோடோபாஸ் கரைசலில் கிழங்குகளை சுமாா் 24 மணி நேரம் உலா்த்தி நடவேண்டும். 5 அல்லது 6 இலைகள் உள்ள திசு வளா்ப்பு கன்றுகளை நடவு செய்யலாம். நடவின்போது, ஒரு கன்றுக்கு 25 கிராம் சூடோமோனாஸ் புளுரசன்ஸ் இடவேண்டும் மேலும் சனபை போன்ற பசுந்தாள் உரங்களை 45 நாள் வளா்த்து உழுதல் வேண்டும் இதன் மூலம் நூற்புழு எண்ணிக்கையை குறைக்கலாம் என்று மாணவிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாணவர்களின் விடைத்தாளில் 'ஜெய் ஸ்ரீராம்': பேராசிரியர்கள் பணியிடை நீக்கம்!

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை!

ஸ்ட்ராபெர்ரி கண்ணே! விண்வெளிப் பெண்ணே..!

புயல், வெள்ளம் பாதிப்பு: தமிழ்நாட்டிற்கு 682 கோடி நிதி ஒதுக்கீடு!

காங்கேயத்தில் சேதப்படுத்தப்பட்ட தலித் குடியிருப்புகள்!

SCROLL FOR NEXT