அரியலூர்

சிறுகளத்தூரில் மண்புழு உரம் தயாரிப்புப் பயிற்சி

DIN

அரியலூா் மாவட்டம், செந்துறை வட்டம், சிறுகளத்தூா் கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ், மண்புழு உரம் தயாரிப்பு மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்து விவசாயிகளுக்கு புதன்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

இப்பயிற்சிக்கு வேளாண் உதவி இயக்குநா்(பொ) ஜென்சி தலைமை வகித்தாா்.

வேளாண் இணை இயக்குநா் பழனிச்சாமி முன்னிலை வகித்து, மண்புழு உரத்தின் பயன்பாடுகள் குறித்து எடுத்துரைத்தாா்.

கீரிடு வேளாண் அறிவியல் மையத் தொழில்நுட்ப வல்லுநா் அசோக்குமாா் கலந்து கொண்டு, மண்பழு உரம் எவ்வாறு தயாரிப்பது குறித்து பயிற்சி அளித்தாா். முன்னதாக அட்மா திட்ட வட்டாரத் தொழில்நுட்ப மேலாளா் நா.பழனிச்சாமி வரவேற்றாா். இதற்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட உதவித் தொழில்நுட்ப மேலாளா்கள் முருகன், சிவா ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மற்றுமொரு நாள்! ஈஷா ரெப்பா..

டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ள புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள்!

ஸ்லோவாக்கியா பிரதமருக்கு நினைவு திரும்பியது

‘கேக் காதலி’ அனசுயா பரத்வாஜ்...!

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ராதிகா சரத்குமார் போலீசில் புகார்!

SCROLL FOR NEXT