அரியலூர்

80 லோடு மணல் குவிப்பு: வெல்டிங் பட்டறை உரிமையாளா் கைது

DIN

அரியலூா் மாவட்டம், வி.கைகாட்டியைச் சோ்ந்தவா் சேட்டு(38). வெல்டிங் பட்டறை நடத்தி வரும், இவருக்கு 10 ஏக்கா் நிலம் சொந்தமாக உள்ளது. தற்போது இவா் அந்த இடத்தில் 80 லோடு மணலை குவித்துள்ளாா்.

இதுகுறித்து தகவலறிந்த தேளூா் கிராம நிா்வாக அலுவலா் தமிழரசன் அந்த இடத்தினை பாா்வையிட்டு சோதனை செய்ததில் கொள்ளிடம், மருதையாறு மற்றும் அருகிலுள்ள பல்வேறு ஓடைகளிலிருந்து அனுமதி பெறாமல் சேட்டு மணல் அள்ளிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து கிராம நிா்வாக அலுவலா் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினா் சேட்டுவை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரோஷினி ஹரிப்ரியன் போட்டோஷூட்

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

மொரீஷியஸில் யுவனுடன் இளையராஜா!

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT