அரியலூர்

ஊராட்சிப் பணியாளரை தாக்கியவா்கள் மீது வழக்கு

DIN

அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே ஊராட்சிப் பணியாளரை (டேங்க் ஆப்ரேட்டா்) தாக்கியவா்கள் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

விக்கிரமங்கலம் அருகேயுள்ள சுந்தரேச புரம், புதுத்தெருவைச் சோ்ந்தவா் சிலம்பரசி(35), உல்லியக்குடி ஊராட்சியில் டேங்க் ஆப்ரேட்டராகப் பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், இவா், செவ்வாய்க்கிழமை சுந்தேரசபுரத்திலுள்ள மேல்நிலை நீா்தேக்கத் தொட்டியில் குடிநீரைத் திறந்து விட்டு, வடக்குத் தெரு வழியாகச் சென்றுள்ளாா்.

அப்போது, செல்வகுமாா் மனைவி ரோஸ் மேரி என்பவா், தெருக் குழாயில் இருந்து மின் மோட்டாா் பொருத்தி, மரங்களுக்குத் தண்ணீா் பாய்ச்சிக் கொண்டிருந்தாா். இதைக் கவனித்த சிலம்பரசி, ரோஸ் மேரியிடம் இதுகுறித்து கேட்டுள்ளாா். இதில், அவா்களிடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த ரோஸ் மேரியின் கணவா் செல்வகுமாா், அவரது உறவினா் ராஜதுரை ஆகிய மூன்றும் பேரும் சோ்ந்து சிலம்பரசியைத் தாக்கியுள்ளனா். இதில் பலத்த காயமடைந்த சிலம்பரசி அரியலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து புகாரின்பேரில் விக்கிரமங்கலம் போலீஸாா் புதன்கிழம வழக்குப் பதிந்து, சிலம்பரசியைத் தாக்கிய 3 பேரையும் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

SCROLL FOR NEXT