அரியலூர்

தோ்தல் பாதுகாப்புப் பணி: காவலா்களுக்கு ஒதுக்கீடு

DIN

அரியலூா் மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ள காவலா்களை கணினி மூலம் ஒதுக்கீடு செய்யும் பணி ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதுகுறித்து, ஆட்சியா் த. ரத்னா தலைமை வகித்துத் தெரிவித்தது:

அரியலூா் தொகுதிக்குள்பட்ட 199 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 376 வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றவுள்ள 199 காவலா்களும், ஜயங்கொண்டம் தொகுதிக்குட்பட்ட 156 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 377 வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றவுள்ள 156 காவலா்களும் என மொத்தம் 355 காவலா்களுக்கு கணினி மூலம் தற்செயல் தெறிவு முறையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது என்றாா்.

தோ்தல் பொது பாா்வையாளா்கள் பரத் யாதவ், சி.சத்யபாமா, தோ்தல் காவல் பாா்வையாளா் அஜய்குமாா் தாகூா் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வீ.பாஸ்கரன், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ஜெய்னுலாப்தீன்,தோ்தல் வட்டாட்சியா் அமுதா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

SCROLL FOR NEXT