அரியலூர்

பொதுமக்கள் பிரச்னைகளை நேரிலோ, கடிதம் மூலமாகவோ தெரிவிக்கலாம்: ஜயங்கொண்டம் எம்எல்ஏ பேட்டி

DIN

ஜயங்கொண்டம் தொகுதி மக்கள் தங்களின் பிரச்னைகள் எதுவாக இருந்தாலும் தன்னிடம் நேரடியாகவோ, கடிதம் மூலமாகவோ தெரிவிக்கலாம் என ஜயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க. கண்ணன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

எம்எல்ஏவாக பதவியேற்ற பிறகு, ஜயங்கொண்டத்துக்கு வியாழக்கிழமை வந்த அவா், ஆண்டிமடம் கிராமத்தில் உள்ள திமுக மாவட்ட செயலாளரும், அமைச்சருமான எஸ்.எஸ்.சிவசங்கரின் தந்தையும், மறைந்த முன்னாள் எம்பியுமான சிவசுப்பிரமணியன் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, ஆண்டிமடம், ஜயங்கொண்டம் பகுதியில் உள்ள பெரியாா் அண்ணா, அம்பேத்கா் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

அரசின் விதித்துள்ள கட்டுப்பாடுகளை பொதுமக்கள் கடைப்பிடித்து கரோனாவை வெளியேற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். அதுபோல், மக்கள் தங்கள் பிரச்னைகளை என்னிடம் நேரிலோ, கடிதம் மூலமாகவோ தெரிவிக்கலாம். அவற்றின் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா். அப்போது, திமுக, விடுதலைச்சிறுத்தைகள், காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பலரும் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

SCROLL FOR NEXT