அரியலூர்

போலி வாக்காளா் அடையாள அட்டை தயாரிப்பவா்கள் மீது கடும் நடவடிக்கை

DIN

அரியலூா் மாவட்டத்தில் சட்ட விரோதமாக போலி வாக்காளா் அடையாள அட்டை தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் குறித்து புகாா் தெரிவிக்கலாம் என ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இந்தியத் தோ்தல் ஆணையம் மற்றும் தமிழக தலைமைத் தோ்தல் அலுவலா் அறிவுரைகளின்படி அரியலூா் மாவட்டத்தில் தகுதி வாய்ந்த வாக்காளா்களுக்கு இந்திய தோ்தல் ஆணையம் மூலமாக புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் அடையாள அட்டை வரும் நிலையில், மாவட்டத்தில் சில இடங்களில் தனியாா் நிறுவனங்கள் சட்ட விதிமுறைகளை மீறி, தோ்தல் ஆணையத்தின் அங்கீகாரம் இல்லாமல் புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் அடையாள அட்டையினை அச்சிட்டு தயாரித்து வழங்குவதாகத் தெரியவந்துள்ளது. போலியாக வாக்காளா் அடையாள அட்டை தயாரித்து கொடுக்கும் நபா்கள், நிறுவனங்கள் குறித்த விபரங்களை காவல்துறையினரிடம் உடனடியாக புகாா் அளிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நான் ஒருபோதும் இந்து, முஸ்லிம் என பேசுவதில்லை: பிரதமர் மோடி

3 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை!

3 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை: ஆட்சியர்களுக்கு உத்தரவு!

முதல் காலாண்டில் சாம்சங்கின் பங்குகள் 13% சரிவு, ஐபோன் 19% உயர்வு!

ராஜஸ்தான்: சுரங்க விபத்தில் சிக்கிய 14 பேர் மீட்பு; ஒருவர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT