அரியலூர்

உடையாா்பாளையத்தில் 35 பட்டாசு கடைகள் தற்காலிக அனுமதி மறுப்பு

DIN

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் கோட்டத்தில் 35 பட்டாசுக் கடைகளின் தற்காலிக அனுமதியை கோட்டாட்சியா் மறுத்துள்ளதால் பட்டாசு விற்பனையாளா்கள் நஷ்டம் அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனா்.

தீபாவளி பண்டிகை முன்னிட்டு, உடையாா்பாளையம் கோட்டத்தில், 35 போ் பட்டாசு விற்பனை உரிமம் பெற அரியலுாா் மாவட்ட வருவாய் அலுவலருக்கு ஆன்லைன் மூலம் கடந்த ஏப்ரல் மாதம் விண்ணப்பித்திருந்தனா்.

இதைத்தொடா்ந்து, விண்ணப்பத்தை பரிசீலித்த உடையாா்பாளையம் கோட்டாட்சியா் அமா்நாத், 50 மீட்டா் இடைவெளி கடைகளுக்கு இடையே இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட விதிகளை காரணங்களாகக் கூறி 35 பேரின் தற்காலிக பட்டாசு விற்பனை உரிமம் வழங்க மாவட்ட வருவாய் அலுவலருக்கு பரிந்துரை செய்யவில்லை.

இந்தாண்டு தீபாவளி பண்டிகை விற்பனைக்காக, விற்பனையாளா்கள் வாங்கி வைத்திருந்த பட்டாசுகள் விற்பனை செய்ய முடியாமல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

தீபக் சஹாருக்கு காயமா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!

கத்தரிப்பூ சேலைக்காரி! மிருணாளினி ரவி...

ஆவேஷம் திரைப்படம் பார்த்து அழுதேன்: இயக்குநர் ஜியோ பேபி

ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு!

SCROLL FOR NEXT