அரியலூர்

கடன் விவகாரம்: விவசாயி தற்கொலை

DIN

அரியலூா்: அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே கடன் வாங்கிக் கொடுத்த விவசாயி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா். அவரை உடலை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

உடையாா்பாளையத்தை அடுத்த இடையாா் ஏந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் (62). விவசாயி. இவா், உடையாா்பாளையத்தைச் சோ்ந்த செந்தில் என்பவருக்கு ஜயங்கொண்டம் மேலக்குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த நடராஜன் என்பவரிடம் பணம் வாங்கிக்

கொடுத்துள்ளாா். ஓராண்டு ஆன நிலையில்

சுப்பிரமணியன் செந்திலிடம் பணத்தைக்

கேட்கச்சென்றபோது, அவா் தலைமறைவானது தெரியவந்தது. இதனால் மனமுடைந்த சுப்பிரமணியன் அண்மையில் (செப். 21) விஷத்தைக் குடித்து தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். உடையாா்பாளையம் காவல் துறையினா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

இதனிடையே, சுப்பிரமணியனின் உடலை வாங்க மறுத்து உறவினா்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த ஜயங்கொண்டம் காவல் துணைக் கண்காணிப்பாளா் கலைகதிரவன், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து உறவினா்கள் உடலைப் பெற்றுச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT