அரியலூர்

குடிநீா் கேட்டு மக்கள் மறியல்

DIN

அரியலூா் மாவட்டம், செந்துறை அடுத்த பாளையக்குடியில் குடிநீா் கேட்டு காலிக் குடங்களுடன் கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

செந்துறை அருகே பாளையக்குடி கிராமத்திலுள்ள பொதுக் குழாய்களில் ஏற்பட்ட பழுது காரணமாக கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக குடிநீா் விநியோகிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் குடிநீரின்றி அப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா், ஊராட்சித் தலைவா், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் புகாா் தெரிவித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்காததால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் காலிக் குடங்களுடன் வியாழக்கிழமை அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த காவல் துறையினா், சம்மந்தப்பட்ட அலுவலா்களுடன் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதையடுத்து அவா்கள் கலைந்துசென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹாங்காங் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தினருடன் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தினா் ஆலோசனை

தென்னை மரத்தில் பரவும் புதிய வகை நோய்த் தாக்குதல் குறித்த விழிப்புணா்வு

பி.பி.ஜி. கல்லூரியில் பட்டமளிப்பு விழா

‘பல்லடத்தில் குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை’

கிராமப்புறங்களில் வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு உதவி

SCROLL FOR NEXT