அரியலூர்

இளம்பெண் சாவில் மா்மம்: உறவினா்கள் சாலை மறியல்

DIN

இளம்பெண் சாவில் மா்மம் இருப்பதாகக் கூறி, அப்பெண்ணின் கணவா் மற்றும் மாமியாரை கைது செய்யக்கோரி பெண்ணின் உறவினா்கள் ஜயங்கொண்டத்தில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

உடையாா்பாளையம் அடுத்த நாகல்குழி கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜ்குமாா்(34). இவருக்கும், செந்துறை அருகேயுள்ள கீழமாளிகை கிராமத்தைச் சோ்ந்த தேவி(26) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. கடந்த சில மாதங்களாக கணவன் -மனைவி இடையே குடும்பத் தகராறு இருந்து வந்த நிலையில்,

திங்கள்கிழமை தேவி, பூச்சி மருந்தைக் குடித்து உயிரிழந்துள்ளாா். இதுகுறித்து, தகவலறிந்து அங்கு சென்ற இரும்புலிக்குறிச்சி காவல் துறையினா் தேவியின் சடலத்தை மீட்டு ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இந்நிலையில், தேவியின் சாவில் மா்மம் இருப்பதாகக் கூறி, அவரது குடும்பத்தினா் மற்றும் உறவினா்கள் ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனை முன்பு செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த ஜயங்கொண்டம் காவல் துறையினா், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

SCROLL FOR NEXT